வேகக் கட்டுப்பாட்டையிழந்த வான் கோர விபத்து..மூவர் ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலி..!!

கொழும்பு – மினுவாங்கொட பிரதான வீதியின் ஏக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்து சுவருடன் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் 48, 49, மற்றும் 64 வயதுடைய மூவரே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.