இலங்கையில் கொரோனா தடுப்பூசியினால் பலருக்கும் காய்ச்சல்..!! பீதியடைய வேண்டாமென அறிவுறுத்தல்.!

இலங்கையில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், நேற்றைய தினம் தடுப்பூசி வழங்கப்பட்ட நபர்களுக்கு எவ்வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.எனினும், தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஊசி ஏற்றப்பட்டால் வருகின்ற சாதாரண காய்ச்சலாக இருக்க கூடும். சிறு பிள்ளைகளுக்கு ஊசி ஏற்றினால் காய்ச்சல் வரும்.அது போன்று இதுவும் சாதாரண காய்ச்சலாக தான் இருக்கும்.அதனை தவிர்த்து, ஒவ்வாமை நிலைமை ஒன்றும் பதிவாகவில்லை. அது மிகவும் சிறப்பான விடயமாகும்.
இந்நிலையில், எந்தவித பிரச்சினையும் இன்றி தொடர்ந்தும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுத்து செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.