தற்போது கிடைத்த செய்தி..நாடு முழுவதிலும் இன்று முன்னிரவு வரை 37 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி..!!

இலங்கை முழுவதும் இன்று இரவு 7.30 மணிவரை 32 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொவிட்19 தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தொிவித்திருக்கின்றது.

அதன்படி, இன்றைய தினம் 32,539 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 37,825 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதேவேளை 2ம் கட்டமாக இந்திய அரசாங்கம் நன்கொடையாக வழங்கவுள்ள கொவிட்19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்,எனவும், அதற்கிடையில் சீனாவின் மருந்தும் கிடைக்கப்பெறவுள்ளதாகல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.