ஈழத்தின் மறைந்த மூத்த எழுத்தாளர் மொமினிக் ஜுவாவிற்கும் கொரோனா தொற்று உறுதி..!!

கடந்த 28 ஆம் திகதி இலங்கையின் மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது 94 ஆவது வயதில் உயிரிழந்தார்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது சடலம் இன்று மாலை 03.00 மணிக்கு பொரளையில் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டதாகவும், கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாரியளவிலான இறுதி அஞ்சலிகள் இடம்பெறவில்லை என்றும் அவரது மகன் தெரிவித்தார்.எண்ணற்ற தமிழ் நூல்களை சமூகத்திற்கு படைத்த டொமினிக் ஜீவா, முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் கடந்த வியாழனன்று கொழும்பில் காலமானார்.1940 ஆம் ஆண்டளவில் எழுத்துத் துறையில் கால் பதித்த அன்னார், ஈழ இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாவார்.இந்நிலையில்,அவரது மறைவுக்கு பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.