தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 62,851 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 879 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.