கிளிநொச்சிப் பொலிஸார் அதிரடி..வீட்டுக் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கேரளக் கஞ்சா அதிரடியாக மீட்பு.!!

கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியில் வீட்டுக் கூரையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 25 கிலோ 456 கிராம் கஞ்சாவினை கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்பு பிரிவினாரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் மது ஒழிப்பு பிரிவினாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டு, கஞ்சா மீட்கப்பட்டதோடு, வீட்டு உரிமையாளரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்