தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் அம்மாவின் காலைப் பிடித்து நின்ற குழந்தை..!! (வைரலாகும் நெகிழ வைக்கும் காணொளி)

அமெரிக்க நாட்டில் பிரபல தொலைக்காட்சி ஏபிசி7 செய்தி நிறுவனம் உள்ளது. இந்த செய்தி நிறுவனத்தில் வானிலை தொகுப்பாளராக லெஸ்லி லோபஸ் பணியாற்றி வருகிறார்.அவர் தற்போது கொரோனா பரவல் காரணமாக காரணமாக பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றி வரும் லெஸ்ஸி, வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். தினசரி இரவு வேளையில் மாநில வானிலை அறிக்கையை தொகுப்பித்து வழங்குவது வழக்கம்.நேற்று இரவு நேரடி ஒளிபரப்பின் போது, வானிலை முன்னறிவிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, வானிலை அறிக்கை செய்தியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, அவரது பத்துக் மாத குழந்தை தவழ்ந்து வந்து தாயைத் தேடி வந்து காலினை பிடித்து எழுந்து நிற்க முயற்சி செய்தது.