இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்திக்கு புதிய குழு..!! அமைச்சர் நாமல் அங்கீகாரம்

இலங்கை கிரிக்கெட்டின் அபிவிருத்தி தொடர்பில் கண்காணிக்க விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அங்கீகாரமளித்துள்ளார்.குறித்த குழுவிற்கான அங்கீகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

நான் புதிய கிரிகெட் குழுவில் நியமிக்கப்படவுள்ளவர்களில் பெயர் விபரங்களை சிபாரிசு செய்துள்ளேன். இந்தக் குழுவானது வீரர்களின் முன்னேற்றம் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் என குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, குறித்த குழுவில் 5 பேர் அடங்கியுள்ளதாகவும் அதில் குமார் சங்கக்கார, அரவிந்த டி சில்வா, மகேல ஜெயவர்தன, முத்தையா முரளிதரன் மற்றும் ரொஷான் மஹாநாம ஆகியோர் உள்ளடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.