ஆளுனர் செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் வெட்டு..!! வடமாகாண கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு..!!

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் கடந்த 18ஆம் திகதி வடமாகாண ஆளுனர் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் அன்றைய நாள் விடுமுறையை சம்பளமற்ற விடுமுறையாக கணிக்குமாறு வடமாகாண கல்விஅமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து சென்று வன்னியில் கடமையாற்றும் ஆசிரியர்கள் ஆறு வருடங்கள் பணியாற்றிய பின்னரும் தமக்கு இடமாற்றம் வழங்கவில்லை எனவும், தெரிவித்து கடந்த 18ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் தாம் கடமையாற்றும் பாடசாலைகளுக்கு சுகவீன விடுமுறை அறிவித்தலையும் அனுப்பி வைத்திருந்தனர்.நிர்வாக கோவையின் பிரகாரம் சலுகையாக வழங்கப்படும் ஒரு விடுமுறையை பெற்று அந்த விடுமுறைக்கு சுகவீனத்தை காரணமாக காண்பித்த போதிலும், அவர்கள் மாகாண ஆளுனர் செயலகம் முன்பாகவும், மாவட்ட செயலகத்தின் முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,அதனால் அவர்கள் அனைவரது விடுமுறையையும் சம்பளமற்ற விடுமுறையாக கணிக்குமாறு வலய கல்விப் பணிப்பாளர்களிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அந்தக் கடிதம் தற்போது பாடசாலை அதிபரிகளிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன்,போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட கோவையிலும் அது ஒரு குற்ற நடவடிக்கையான ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.