கிளிநொச்சியில் இன்று காலை முதல் கோவிட்- 19 தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்.!! (புகைப்படங்கள் இணைப்பு)

கொரோனா தடுப்பூசியைச் சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கும் முதல் கட்ட நடவடிக்கை நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.