வீட்டுக்குள் 10 கிலோ கஞ்சாவுடன் மாட்டிய பிரதேச சபை சாரதி தப்பியோட்டம்..சிறிய மகனுடன் மனைவி கைது..!! பருத்தித்துறையில் பரபரப்பு.!

அச்சுவேலி பொலிஸ் பிரிவில் 10 கிலோ கஞ்சாவுடன் பெண் மற்றும் அவருடைய சிறிய மகன் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவால் நேற்று (29) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஞ்சா கடத்தல்காரனான கணவன் வீட்டிலிருந்து தப்பியோடியதால் வீட்டிலிருந்த மனைவி கைது செய்யப்பட்டார். தப்பியோடிய கணவன் பிரதேசசபை சாரதியாவார்.பருத்தித்துறை பிரதேசசபை சாரதியொருவர் நீண்ட நாட்களாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை புலனாய்வு பிரிவினர் மோப்பம் பிடித்து, பின்தொடர்ந்து வந்தனர்.
நேற்று, அவரது வீட்டில் கஞ்சா இருப்பதை அறிந்த பொலிசார் நேற்று மாலை அவரை தேடி பருத்தித்துறை பிரதேசசபைக்கு தேடிச் சென்றபோதும் அவர் தலைமறைவாகி விட்டார்.இதையடுத்து, நேற்று இரவு அவர்களது வீட்டிற்குள் பொலிசார் அதிரடியாக நுழைந்தவர்.பொலிசார் வீடு புகுந்ததும், பிரதேசசபை சாரதி தப்பியோடினார்.இதையடுத்து வீட்டில் நடத்திய சோதனையில், 10 கிலோகிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.இதையடுத்து, சாரதியின் மனைவி, சிறிய மகன் ஆகியோர்- கஞ்சா மீ=ட்கப்பட்ட வீட்டிலிருந்தவர்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இன்று அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.தலைமறைவான சாரதி, ஏற்கனவே கசிப்பு கடத்தல் விவகாரத்தில் கைதாகி, போதிய சாட்சியமின்மையால் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.