இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட முதல் மருத்துவர் தெரிவித்துள்ள முக்கிய தகவல்..!!

தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என விசேட மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட் – 19 தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா ஷெனேக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியை முதல் மருத்துவராக ஆனந்த விஜேவிக்ரம செலுத்திக் கொண்டார்.இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது;தடுப்பூசி குறித்த அனைத்து தகவல்களையும் ஆராய்ச்சிகளையும் துல்லியமாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்தே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இந்த தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கியுள்ளது.குறித்த தடுப்பூசி பாதுகாப்பானது.இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினால் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.