வடபகுதி மக்களுக்கு மிக முக்கியமான செய்தி..தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி கள் நாளை முதல் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஐயாயிரத்து 820 மருந்துகளும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 மருந்துகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 மருந்துகளும், வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 மருந்துகளும், மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 தடுப்பூசி மருந்துகளும் கோரப்பட்ட நிலையில் அவை முழுமையாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கும் தடுப்பூசி கோரப்பட்ட நிலையில், அவை தனியான திட்டத்தின் ஊடாக வழங்கப்படுமென சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி, கொவிஷீல்ட் (AstraZeneca/COVISHELD) என்ற பெயரில் ஐந்து இலட்சம் மருந்துகள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.அந்தத் தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.