இலங்கையில் இன்று முதல் முதலாக கோவிட்- 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மருத்துவர்..!!

இலங்கையில் கொரோனா தடுப்பூசியை அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையின் (ஐ.டி.எச்) மருத்துவ ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜய விக்ரம பெற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்கும் விதமாக இந்தியாவில் இருந்து நேற்று வியாழக்கிழமை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ராஜெனீகா கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முதல் ஆறு வைத்தியசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில், முதலாவது தடுப்பூசி படையினருக்கு செலுத்தப்பட்டது. சுகாதார பணியாளர்கள், இராணுவம் மற்றும் பொலிசாருக்கு முதல் கட்டமாக இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.