கதிர்காமக்கந்தன் பக்தர்களுக்கு பேரதிர்ச்சி தரும் செய்தி..ஸ்ரீ வள்ளி அம்மன் ஆலயப் பூசகர், மனைவிக்கு கொரோனா!! உடன் இழுத்து மூடப்பட்ட கோயில்..!!

கதிர்காமம் ஸ்ரீ வள்ளி அம்மன் ஆலய பிரதம பூசகருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கதிர்காமம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சமன் திசாநாயக்க தெரிவித்தார்.இதையடுத்து,நேற்று முதல் மறு அறிவித்தல் வரை ஸ்ரீ வள்ளியம்மன் ஆலயம் மூடப்பட்டுள்ளது.
அத்துடன், தொடர்ந்து 15 நாட்களாக இநத ஆலயத்திற்கு வந்து வழிபாடுகளில் கலந்து கொண்டு தத்தம் ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் கதிர்காமத்திலிருந்து இவ்வாலயத்திற்கு வந்து சென்றவர்கள் தத்தமது பகுதிக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர்களை தொடர்பு கொள்ளும்படி கதிர்காமம் பொதுச்சுகாதார பிரிவினர் கேட்டுள்ளனர்.ஆலயப் பூசகர் அண்மையில் உறவினர் ஒருவரது மரணச்சடங்கில் கலந்து கொண்டிருந்தார். இதில் கலந்து கொண்டிருந்த எவருக்கேனும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம், அதன் மூலம் இவர்களிற்கு பரவியிருக்கலாமென கருதப்படுகிறது.