இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவரின் நிலை கவலைக்கிடம்..!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அரச மருத்துவ அதிகரிகள் சங்கம் கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட மருத்துவர் தற்போது கராபிடிய போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பதில் செயலாளர் டாக்டர் நவின் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.அவரது சிகிச்சையை தீவிரப்படுத்த கராபிடிய போதனா வைத்தியசாலையுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.