அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசித் திட்டம் இன்று காலை கொழும்பில் ஆரம்பம்..!! முதல் ஊசி மருந்து இராணுவ வீரர்களுக்கு..!!

இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி விநியோக நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மூன்று இராணுவ வீரர்களுக்கு அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி முதன்முதலில் செலுத்தப்பட்டுள்ளது.முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் ஆறு முக்கிய வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் 5 இலட்சம் சீரம் நிறுவனம் உருவாக்கியுள்ள அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் எனும் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது.