தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் கொரோனாவால் மேலும் ஏழு பேர் மரணம்..!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர், அசேல குணவர்தன சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.கொழும்பு 06 பிரதேசத்தைச் சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும், நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்தினபுரி பகுதியைச் 76 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரும்,கொழும்பு சிறைச்சாலையின் 61 வயதுடைய ஆண் கைதி ஒருவரும், கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் எடேரமுல்ல பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை இன்றைய தினம் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.