தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வடமாகாணத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 677 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.


இதில், யாழ் மாவட்டம் 3 பேர், கிளிநொச்சி மாவட்டம் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டம் 5 பேர், மன்னார் மாவட்டம் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.