ரஷ்ய நாட்டுத் தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் ஊசி மருந்துகளை கொள்வனவு செய்யும் ஈரான்..!!

2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கில் மிக மோசமாக கொரோனா தொற்று பதிவாகிய ஈரான், ரஷ்யா, இந்தியா அல்லது சீனா தயாரித்த தடுப்பூசிகளை மட்டுமே நம்புவதாகவும் அறிவித்துள்ளது.ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், 2 மில்லியன் டோஸ்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தயாரித்த தடுப்பூசிகளைப் பயன்படுத்த இந்த மாதம் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியால் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.