பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதலாவது ஈழத்தமிழர்..!!

கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் மட்டும் 17,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,019 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் நாட்டில் 269 பேருக்கு இந்த நோய் காரணமாக உயிரிழந்தனர். இதேவேளை ஈழத்தில் இருந்து பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் கொடிய கொரோனா வைரஸ் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இலண்டன் டூட்டிங் பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டசுந்தரலிங்கம் மெய்யழகன் (மெய்க்குட்டி) எனும் தமிழர் (29/03/2020)இன்றைய தினம் கொரோனா வைரசால் ஏற்ப்ட பாதிப்பின் காரணமாக மரணம் அடைந்துள்ளார்.இவர் ஒரு தனியார் வாகன சாரதியாக (cab Driver) பணியாற்றியவர் என்பதும் குறிப்பிபத்தக்கது.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியான முதலாவது தமிழர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.அன்னாருக்கு பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம் என மூகநூலில் சமூக ஆர்வலர் குமனான் முருகேஷன் கடவுளை பிரார்த்தனை செய்வதாக குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.