சற்று முன்னர் கிடைத்த செய்தி..இலங்கையின் மற்றுமொரு முக்கிய அமைச்சரும் இன்று முதல் தனிமைப்படுத்தலில்!!

வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க இன்று (புதன்கிழமை) முதல் அவரின் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இன்று காலை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் நெருங்கி பழகிய நிலையில் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கடந்த 24 ஆம் திகதி இருவரும் வலபனையில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.இதுவரை நாடாளுமன்றில் அமைச்சர், இராஜாங்க அமைச்சர் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.