பிரபல பாடசாலை எதிரில் இயங்கிய விபச்சார விடுதி திடீர் முற்றுகை..மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது..!!

திருகோணமலை நகரில் தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் பாடசாலையின் எதிரே நீண்டகாலமாக மஸாஜ் கிளப் என்கின்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி இன்று (27) தலைமையகப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.
முற்றுகையின் போது மூன்று பெண்கள் உட்பட விடுதி நடத்திய ஆண் ஒருவரையும் தாம் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து விடுதி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஐர் படுத்த தலைமையகப் பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.