பகிஸ்கரித்த கூட்டமைப்பு..ஜோராக நிறைவேறிய யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம்..!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது.இன்று நடைபெற்ற சபையின் சிறப்பு அமர்வில் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் வரவு – செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தார். வரவு – செலவுத் திட்டத்துக்காக ஆதரவாக 26 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் அளிக்கப்பட்டன.யாழ்ப்பாணம் மாநகர சபையில் 45 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 15 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் மேயர் இ.ஆனல்ட் இன்று சபைக்கு வரவில்லை.யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகப் பதவி வகித்த இ.ஆனல்ட் சமர்ப்பித்த வரவு – செலவுத் திட்டம் இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து பதவி இழந்தார்.அதன்பின்னர் நடைபெற்ற மேயர் தெரிவில் இ.ஆனல்ட் மற்றும் வி.மணிவண்ணன் ஆகியோர் போட்டியிட்டனர். அதில் வி.மணிவண்ணன் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.அதையடுத்து அவரால் இன்று வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாநகரசபையில் மொத்தமாக 45 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் . அதில் கூட்டமைப்பு -16, முன்னணி (மணிவண்ணன்) -10, ஈபிடிபி -10, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 3, ஐக்கிய தேசியக் கட்சி -3, சிறிலங்கா சுதந்திரக் கட்சி -2, தமிழர் விடுதலைக் கூட்டணி -1 என்கிற அடிப்படியில் உறுப்புரிமை கொண்டுள்ளார்கள்.இன்றைய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் நடுநிலை வகித்தனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் எதிராகவும் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.