மிக விரைவில் இலங்கைக்கு சீனா வழங்கப் போகும் 3 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்..!!

சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை இலங்கை பெறவுள்ளதாக கொரோனா தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் சீனா 3 இலட்சம் ஊசிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜினெகா கொரோனா தடுப்பூசிகள் 5 இலட்சம் (டோஸ்கள்) நாளை காலை 11.00 மணியளவில் எயார் இந்தியா விமானம் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என இந்திய விமான சேவையின் கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் சாரநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.இந்த தடுப்பூசிகளை கொரோனா பணியில் உள்ள 2 இலட்சத்து 50 பணியாளர்களுக்கு போடும் திட்டம் வெள்ளி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.