கொரோனாவினால் கொடிகட்டிப் பறக்கும் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்..!! வெறும் ஒரு மணி நேரத்தில் 90 கோடி ரூபா சம்பாதித்து உலக சாதனை..!!

கொரோனா காலகட்டத்தில் நாட்டில் பல லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வாடிய நிலையில், அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கூட கஷ்டப்படும் நிலைக்கு பலரும் சென்றது மறுக்கமுடியாத உண்மையே. ஆனால், அப்படி ஒரு இக்கட்டாண காலகட்டத்திலும் கூட ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபா, சம்பாத்தியத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி. இந்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.சுருக்குமாக சிவாஜி படத்தில் ரஜினி சொல்லவது போல், பணக்காரனை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழையாகவும் மாற்றியுள்ளது இந்த கொரோனா வைரஸ். இதுவே பல வெளிநாடுகளிலும் கடைகளை வைத்திருக்கும் தொழில் அதிபர்களுக்கும் நடந்துள்ளது.ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலை.

இது குறித்து சமீபத்தில் ஆக்ஸ்பாம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. கொரோனா காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில், சம்பாதித்த தொகையை, ஒரு சாதாரண முறைசாரா தொழிலாளி சம்பாதிக்க 10,000 ஆண்டுகள் ஆகலாம் என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியுள்ளது. அதோடு இந்தியாவில் சுமார் 24 சதவீதம் மக்கள் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாதத்திற்கு வெறும் 3,000 ரூபா என்ற அளவில் தான் வருமானம் சம்பாதித்ததாக கூறுகிறது.இதில் கவனிகக்தக்க விஷயம் என்னவெனில், 40 கோடி தொழிலாளர்களின் வறுமையை குறைந்தது ஐந்து மாதங்களாவது போக்க, முகேஷ் அம்பானியின் சொத்து மட்டும் போதுமானதாக இருக்கும் என்றும் ஆக்ஸ்பாம் அறிக்கையில் தெரிவித்தது. அதோடு இந்தியாவின் முதல் நூறு பில்லியனர்களின் சொத்து மதிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து 35% அதிகரித்துள்ளதாகவும், இதே சொத்து மதிப்பு 12,97,822 கோடி ரூபா அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.இந்த தொகையானது நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட, கிட்டதட்ட 4 மடங்கு அதிகமாகும்.இந்தியாவின் மக்கள் பெருக்கத்தை முறையாக பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்து மதிப்பை வெளியே சொல்வதே இல்லை.உண்மையான சொத்து மதிப்பை பார்த்தால், அவர்கள் பில்கேட்ஸ் மற்றும் பிரித்தானிய மகாராணியார் போன்ற செல்வந்தர்களை விட 10 மடங்கு அதிக செல்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.