யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!! தாதியர்கள் உட்பட 7 பேர் தனிமைப்படுத்தலில்!!

கொழும்பில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில், யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.இது குறித்து மேலும் அவர் மேலும் தெரிவிக்கும் போது;

கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் PCR பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளி ஒருவர் கடந்த 23 ம் திகதி உறவினர்களால் அழைத்து வரப்பட்டார்.இந்நிலையில் குறித்த நோயாளிக்கு 25 ம் திகதி PCR பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இதனையடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் தாதியர்கள் உள்ளடங்களாக 7 பேர் சுய தனிமைப்படுத்தலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களுக்கான PCR பரிசோதனைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.இதேவேளை, வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இன்னொருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், முடிவெடுக்க முடியாத நிலைமை தென்பட்டதாகவும், அவருக்கு மீண்டும் நாளை பரிசோதனை மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.