தனது பாசமிக்க எஜமானாருக்காக 06 நாட்களாக மருத்துவமனை வாசலில் தவமிருந்த விசுவாசம் மிக்க ஜீவன்.!! (நெகிழ வைக்கும் காணொளி)

தனது பாசம்மிக்க எஜமானருக்காக 6 நாட்கள் மருத்துவமனையின் வாசலிலேயே காத்திருந்த நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியில் கடந்த தை 14ம் திகதி மூளையில் ரத்த உரைவு ஏற்பட்டதால், சென்டர்க் என்ற 68 வயதுடைய முதியவர் ட்ரப்சோன் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.அப்போது அவர் ஆசையாக வளர்த்து வரும் நாய் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் ஆம்புலன்ஸ் பின்னாலயே மருத்துவமனை வரை ஓடி வந்துள்ளது.நீண்ட நேரமாக மருத்துவமனை வாசலில் நாய் ஒன்று கண்களில் கண்ணீருடன் நிற்பதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள், அதுகுறித்து விசாரித்துள்ளனர்.அப்போதுதான் அந்த நாய் முதியவர் சென்டர்கிற்கு சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. உடனே இதுகுறித்து சென்டர்க்கின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.அவர்கள் வந்து நாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.ஆனால், மறுநாளே வீட்டிலிருந்து தப்பித்து மீண்டும் மருத்துவமனை வாசல வந்து எஜமானருக்காக அந்த நாய் காத்திருந்துள்ளது. சென்ட்ரிக் மருத்துவமனையில் இருந்த 6 நாட்களும் மருத்துவமனைக்கு வெளியிலேயே அந்த நாய் காத்திருந்துள்ளது.அந்த 6 நாட்களில், மருத்துவமனை ஊழியர்கள் நாய்க்கு தேவையான உணவுகளை வழங்கி நன்கு பார்த்துக்கொண்டனர். அந்த நாயும் அவர்களுடன் பாசமாகப் பழகியதால், ஊழியர்கள் அனைவரும் அதனுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர்.இந்த நிலையில் சிகிச்சை முடிந்து, சென்டர்க் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சக்கர நாற்காலியில் வந்தார். உடனே பாசத்துடன் அவரை நாய் சுற்றி, சுற்றி வந்ததைக் கண்டு மருத்துவர்களும், ஊழியர்களும் நெகிழ்ச்சி அடைந்தனர். இதோ உங்களுக்காக அந்த நெகிழ வைக்கும் காணொளி..