தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வடக்கில் இன்று இதுவரை 18 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம்காணப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இன்று 681 பேரின் பிசிஆர் மாதிரிகள் போதனா வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்டன.இதில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், கோப்பாய் கொரோனா நிலையத்தில் 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூட சோதனை முடிவு இன்று இதுவரை வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.