உலகெங்கிலும் கோரத் தாண்டவமாடும் கொரோனாவிற்குப் பலியான கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சர்..!!

கொலம்பிய நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார் என அவரது சகோதரர் ஜோஸ் ரெனன் ட்ருஜிலோ தெரிவித்துள்ளார்.ஆழ்ந்த துக்கத்துடன்,என் சகோதரனின் மரணம் குறித்து நான் அறிந்தேன். அவர் தனது நம்பிக்கைகளுக்காக போராடினார், அவற்றைக் காத்து உயிரிழந்தார்” என அமைச்சரின் சகோதரர் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.கார்லோஸ் ஹோம்ஸ் ட்ருஜிலோ கொரோனா தொற்றுக்குள்ளான பின்னர் கொலம்பியாவின் தலைநகரான போகோட்டாவிலுள்ள வைத்தியசாலையில், ஜனவரி 13 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.ட்ருஜிலோ ஒரு கொலம்பிய அரசியல்வாதியும் மற்றும் இராஜதந்திரியும் ஆவார்.தனது தொழில் வாழ்க்கையின் போது, கல்வி மற்றும் உள்துறை அமைச்சராகவும், அமெரிக்க நாடுகளின் அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதராகவும், ரஷ்யா உட்பட பல நாடுகளிலும் பணியாற்றியுள்ளார்.2019 ஆம் ஆண்டில் ட்ரூஜிலோ கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சரானார்.