தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் முகக்கவசங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் 34 பேருக்கு கொரோனா !!

கம்பஹா மாவட்டம் பூகொடை பிரதேசத்தில் இயங்கும் முகக்கவசங்களை தயாரிக்கும் ஆடை தொழிற்சாலையில் 34 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிறுவனத்தில் முதலில் 5 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.இவர்களின் இணைப்பாளர்களான ஏனைய ஊழியர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.இவர்களில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதேச சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.