இலங்கையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 368ஆக அதிகரிப்பு..!

இலங்கை கடற்படையினர் 30 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.வெலிசற கடற்படை முகாமில் உள்ள கடற்படை வீரர்கள்,மற்றும் பொலனறுவையைச் சேர்ந்த கடற்படை மாலுமி உட்பட 30 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதனையடுத்து வெலிசற கடற்படை முகாமை முழுமையாக தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் பொலனறுவைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை வீரருடன் தொடர்பினை பேணிய கடற்படை வீரர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது 30 கடற்படை வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இதேவேளை, நேற்றைய தினம் மாத்திரம் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 368 ஆக அதிகரித்துள்ளது.