இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக ஜெரோம் ஜெயரத்னவை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நியமித்துள்ளது.அதன்படி பெப்ரவரி மாதம் இலங்கை அணியின் மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கை அணியின் முகாமையாளராக ஜெயரத்ன இருப்பார்.

தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளுடன் அசந்த டி மெல், அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து ஜெரோம் ஜெயரத்ன குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தப் பதவிக்கு மேலதிகமாக ஜெர்மி ஜெயரத்ன இலங்கை கிரிக்கெட்டின் தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றுவார்.தொழில்முறை பயிற்சியாளரான ஜெயரத்ன முன்னதாக இலங்கை கிரிக்கெட்டில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்தார். இலங்கை அணிக்காக விளையாடும்போது பல சந்தர்ப்பங்களில் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இருந்த அவர், சமீபத்தில் அணியின் ஆலோசகராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.