இதுவரை 06 நாடாளுமன்ற எம்.பிக்களுக்கு கொரோனா..சபாநாயகர் விடுத்துள்ள அவசர கோரிக்கை..!!

கொவிட் – 19க்கான பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியிலிருந்து 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கடந்த வார நிலவரப்படி சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரையில், நோய்த்தொற்றுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ள நிலையில், மேலும் பரவுவதைத் தடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று, செய்தி வெளியிட்டுள்ளது.இதேநேரம், மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்காலம் என்ற அச்சம் நிலவுவதால், சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து சபையில் அத்தியாவசியமற்ற அனைத்து வேலைகளையும் மட்டுப்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் பிரமுகர்களின் வருகை அனுமதிக்கப்படாது என்பதுடன், அதே நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து அத்தியாவசிய கூட்டங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.