மாணவர்கள் வரவின்மையால் இழுத்து மூடப்பட்டு வேறு அரச தேவைகளுக்காக தாரை வார்க்கப்படும் யாழ்ப்பாணப் பாடசாலை..?

யாழ்.நல்லுார் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலை ஒரு லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி செயலணியின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டிருக்கின்றது. மாகாண கல்வியமைச்சின் ஆழுகைக்குட்பட்ட குறித்த பாடசாலை சைவ பாடசாலையாக மிக நீண்டகாலம் இயங்கிவந்த நிலையில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் மாகாண கல்வியமைச்சினால் பாடசாலை அண்மையில் மூடப்பட்டிருக்கின்றது.இதனையடுத்து, ஜனாதிபதியின் ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் செயலணியின் பயன்பாட்டுக்காக குறித்த பாடசாலை கட்டிடம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண கல்வியமைச்சினால் ஒரு வருடத்திற்கு குறித்த பாடசாலை வழங்கப்பட்டிருக்கின்றது.மாணவர்கள் எண்ணிக்கை குறைவதால் பாடசாலையை மூடும் தீர்மானம் எடுக்கப்படுவதற்கு முன்பே கடுமையான எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்த நிலையில், பாடசாலை மூடப்பட்டு வேறு தேவைக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.