திருமணமாகி வெறும் ஆறு மாதத்தில் இளம்மனைவிக்கு கணவனால் நேர்ந்த சோகம்.!! கதறித் துடிக்கும் பெற்றோர்கள்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பீதர் கிராமத்தை சார்ந்தவர் உமாரா பேகம் (வயது 25). அங்குள்ள சிட்டகுப்பா நிர்ணா கிராமத்தை சார்ந்தவர் மஸ்தான். இவர்கள் இருவருக்கும் கடந்த வருடத்தின் ஜூலை மாதம் 13 ஆம் திகதி திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து ஆறு மாதமாகும் சூழலில், மஸ்தான் தனது மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு தொல்லை செய்து வந்துள்ளான்.ஆனால்,பெண்மணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த மஸ்தான் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து உமாரா பேகத்தை அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று உமாரா பேகம் கணவரின் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.உமாரா பேகம் தற்கொலை செய்துகொண்டதாக மஸ்தான் உமாராவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் விரைந்து சென்ற குடும்பத்தினர்,மகளின் உடலை பார்த்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உமராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும் சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிட்டகுப்பா போலீசார் விரைந்து சென்று,உமராபேகத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிட்டகுப்பா அரசு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து உமாரபேகத்தின் பெற்றோர், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளனர்.