இலங்கையில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 124 பேருக்கு கொரோனா..!!

இலங்கையில் 6 நாட்களுக்குள் கொரோனா தொற்றுடைய 124 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 18 முதல் 23 ஆம் திகதி வரையான 6 நாட்களுக்குள் 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.அத்துடன், வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவை மாவட்டத்திலும் ‘கொரோனா’ தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த மார்ச் 11 ஆம் திகதி முதல் நேற்று (23) இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 368 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று மாத்திரம் 38 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வைரஸ் தொற்றாளர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 107 பேர் குணமடைந்துள்ளனர்.226 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 173 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.