தற்போது கிடைத்த செய்தி..வடக்கில் இன்று இருவேறு இடங்களில் நடந்த பீ.சீ.ஆர் பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 346 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

யாழ்.மாவட்டத்தில் சாவகச்சோி மற்றும் யாழ்.நகர் பகுதிகளில் இருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 4 பேருக்குமாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.இதே வேளை யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 254 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.இதன்படி சாவகச்சோி பிரதேசத்தில் 3 பேருக்கும், கிளிநொச்சியில் ஒருவருக்குமாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.