காலி டெஸ்ட்: சொந்த மண்ணில் சுருண்டது இலங்கை.!! அபாரமாக விளையாடிய இங்கிலாந்து தொடரை முழுமையாக வென்று சாதனை..!!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.காலி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல் இன்னிங்ஸிற்காக 381 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் 110 ஓட்டங்களையும் டிக்வெல்ல 92 ஓட்டங்களையும் தில்ருவான் பெரேரா 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 6 விக்கெட்டுகளையும் மார்க் வுட் 3 விக்கெட்டுகளையும் சேம் கர்ரன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 344 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோ ரூட் 186 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 7 விக்கெட்டுகளையும் தில்ருவான் பெரேரா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இதனையடுத்து 37 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 126 ஓட்டங்களுக்கு சுருண்டது.இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லசித் எம்புல்தெனிய 40 ஓட்டங்ளையும் ரமேஷ் மெண்டிஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இதன்படி இங்கிலாந்து அணிக்கு 164 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டோமினிக் சிப்ளி 56 ஜோஸ் பட்லர் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.இலங்கை அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 3 விக்கெட்டுகளையும் ரமேஷ் மெண்டிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவுசெய்யப்பட்டார்.