வடக்கின் முக்கிய நகரில் திடீரென துடித்து வீழ்ந்து இறக்கும் காகங்களால் பரபரப்பு..!!

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டியப்பகுதிகளில் காகங்கள் இறந்து
கிடப்பதனை அடிக்கடி காண முடிக்கிறதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாத்திற்குள் மட்டும் ஆங்காங்கே ஐந்து காகங்கள் இறந்து கிடந்துள்ளன.இன்றைய தினம் நகர் பகுதியில் காகம் ஒன்று தீடிரென கீழே வீழந்து துடிதுடித்து இறந்து விட்டதாகவும், பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதி
கிழித்து பார்த்த போது, உள்ளே லஞ் சீற் காணப்பட்டதாகவும், பொது மக்களால்
தெரிவிக்கப்படுகிறது.