ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான சேவைகளுக்காக வருபவர்கள் முன்னாயத்தங்களோடு வர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
வைத்தியசாலைக்கு வருபவர்கள் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஒன்றுகூடி கதைத்தல், ஒருவருக்கு அருகில் செல்லுதல் அல்லது அவ்வாறான செயற்பாடுகளை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
