தற்போது கிடைத்த செய்தி..ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் பதவிகளில் மாற்றம்..கட்சியின் தவிசாளராக சரத் பொன்சேகா நியமனம்..!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி முக்கிய பதவிகள் தெரிவு நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.


இதன்படி கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவும், கட்சியின் தவிசாளராக சரத் பொன்சேகாவும், பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கட்சியின் பேச்சாளர்களாக எஸ்.எம். மரிக்கார், மனுஸ நாணயக்கார ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.கட்சி செயற்பாடுகளின் தலைமை அதிகாரியாகவும், கட்சியின் துணை தவிசாளராகவும் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்சியின் செயலாளராக ஹர்ஷ டி சில்வாவும், தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவிற்கு விரைவில் உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.