துணியிலினாலான மாஸ்க் வகைகளை அணிவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை..!!

வேகமாகப் பரவும் புதிய வைரஸிடம் இருந்து தப்புவதற்கு தரமான மாஸ்க் வகைகளை அணியுமாறு பிரான்ஸின் பொதுச் சுகாதாரத்துக்கான உயர் அதிகார சபை(Haut conseil de la santé publique) அறிவுறுத்தி உள்ளது.
இரண்டாம் வகைக்குள் (catégorie 2) அடங்கும் துணியினாலான மாஸ்க்குகள் காற்றை வடிகட்டும் திறன் குறைந்தவை.அவை புதிய வைரஸ் தொற்றை தடுக்கக் கூடியவை அல்ல என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மாற்றமடைந்த இங்கிலாந்து வைரஸ், தென்னாபிரிக்க வைரஸ் என்பன ஜரோப்பாவில் வேகமாகப் பரவி வருவதால் மாஸ்க் அணியும் நடைமுறைகளில் புதிய ஆலோசனை களை சுகாதார அதிகார சபை வெளியிட்டுள்ளது.
வேகமாகப் பரவும் புதிய வைரஸிடம் இருந்து தப்புவதற்கு தரமான மாஸ்க் வகைகளை அணியுமாறு பிரான்ஸின் பொதுச் சுகாதாரத்துக்கான உயர் அதிகார சபை(Haut conseil de la santé publique) அறிவுறுத்தி உள்ளது.
இரண்டாம் வகைக்குள் (catégorie 2) அடங்கும் துணியினாலான மாஸ்க்குகள் காற்றை வடிகட்டும் திறன் குறைந்தவை. அவை புதிய வைரஸ் தொற்றை தடுக்கக் கூடியவை அல்ல என்று பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

மாற்றமடைந்த இங்கிலாந்து வைரஸ், தென்னாபிரிக்க வைரஸ் என்பன ஜரோப்பாவில் வேகமாகப் பரவி வருவதால் மாஸ்க் அணியும் நடைமுறைகளில் புதிய ஆலோசனை களை சுகாதார அதிகார சபை வெளியிட்டுள்ளது.வீடுகளில் சாதாரண துணியினால் தயாரிக்கப்படுகின்ற மாஸ்க்குகளை அணிவதைத் தவிர்த்து முதலாம் வகைக்குள்(catégorie 1)அடங்கும் மீளக் கழுவிப் பயன்படுத்தக் கூடிய துணியினாலான மாஸ்க்குகளை (masque en tissu réutilisable de catégorie 1) வாங்கி அணியுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதார உயர் அதிகார சபையின் இந்த சிபாரிசுகளை நாட்டில் நடைமுறைப் படுத்துகின்ற தீர்மானத்தை சுகாதார அமைச்சே எடுக்கவேண்டும்.கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதில் துணிகளால் தயாரிக்கப்படுகின்ற மாஸ்க்குகள் 70 வீதமும் காற்றை வடிகட்டும் தன்மை கூடிய ரிசுக்களால்(பேப்பர்) முறைப்படி தயாரிக்கப்படுகின்ற(surgical masks and category 1 fabric masks) மாஸ்க்குகள் 90 வீதமும் பாதுகாப்பானவை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.