பழைய கட்டிடத்தை இடிக்க முயன்ற நபர் கட்டிடம் இடிந்து வீழ்ந்து பரிதாபமாகப் பலி..!! யாழ் அளவெட்டியில் சம்பவம்.!

யாழ்.அளவெட்டிப் பகுதியில் பழைய கட்டிடம் ஒன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் அளவெட்டி மேற்கைச் சேர்ந்த மகாதேவன் பிரகலாதன் , வயது 40 என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியர் வருகை தந்து தமது காணியில் ஏற்கனவே அமைந்திருந்த பழைய கட்டிடத்தை அகற்றும் அதே நேரம் புதிய கட்டிடமும் அமைக்கப்படுகின்றது.இவ்வாறு அமைக்கும் பணிகள் பல நாட்களாக இடம்பெற்று வருகின்றது. பணியில் நேற்றைய தினம் பணி இடம்பெறும்போது மாலை 4மணியளவிலியே குறித்த அனர்த்தம் இடம்பெற்று பாதிக்கப்பட்டவர்,உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிர் இழந்திருந்ததனை மருத்துவர்கள் உறுதி செய்த நிலையில், தெல்லிப்பளை பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.