வடமாகாணம் உட்பட பெரும்பாலான பிரதேசங்களில் தனியார் கல்வி நிலையங்கள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்..!!

மேல் மாகாணத்தைத் தவிர்த்து நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல், தனியார் கல்வி நிலையங்கள் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை மீளவும் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் கல்வி நிலையங்களை திறக்க சுகாதார அமைச்சு அனுமதியளித்து சுற்றிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில் வடமாகாணம் முழுவதும் தனியார் கல்வி நிலையங்களை நாளை முதல் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வடக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பிரேத்தியேக வகுப்புகளை நடத்தவேண்டும்.அத்துடன், ஒவ்வொரு பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரியும் தனியார் கல்வி நிலையங்களில் கொவிட் -19 சுகாதார நடைமுறைகள் பின்பற்றுவதனை கண்காணிப்பாளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.ஒரு வகுப்பில் இருக்கைகளின் திறனில் 50 சதவீதம் வரை அல்லது அதிகபட்சம் 100 மாணவர்களுக்கு மட்டுமே.எனினும் ஒரு வகுப்பறையில் 100 க்கும் குறைவான மாணவர்களை அல்லது வகுப்பறையில் அமரக்கூடிய மாணவர் தொகையின் 50% அளவானவர்களே கலந்து கொள்ள முடியுமென சுகாதார அமைச்சு கட்டுப்பாடு விதித்துள்ளது.இடமளிக்க முடியும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பயணத் தடை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைப்படுத்தும் பகுதிகளில், தனியார் கல்வி நிலையங்களை நடத்த முடியாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.