வடக்கில் இன்று 3 பேருக்கு கொரோனா!!

வடக்கில் இன்று இதுவரை 3 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வுகூடத்தில் இன்று 368 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.


இதில், காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த ஒருவர், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.