வேகக் கட்டுப்பாட்டையிழந்த உந்துருளி கோர விபத்து..ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலியாகிய இளைஞன்..!! மேலும் இருவரின் கதி..!

புளியங்குளம்- முல்லைத்தீவு வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்வத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;புளியங்குளம் – முல்லைத்தீவு பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் தண்டுவான் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கரையில் இருந்த மின்சாரத் தூணுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணி கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த தயாபரன் (வயது-31) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.