பிரதமர் மஹிந்தவின் உடல்நலம் தொடர்பில் வெளியான செய்திகளுக்கு பிரதமர் அலுவலகம் மறுப்பு..!!


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் வதந்தி, அவர் பாதுகாப்பாக இருக்கிறார் மற்றும் அவரது வழக்கமான வேலைகளில் கலந்துகொள்கிறார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் பரவிய தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது.பிரதமர் தனது அன்றாட வேலைகளில் கலந்துகொள்கிறார், திங்களன்று திட்டமிடப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் கிடையாது என பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கும் இடையே சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்தும் விதம் குறித்து, இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.