தந்தையின் புதிய காரில் சின்னஞ்சிறு மகள் செய்த காரியம்..பொறுமையின் சிகரத்திற்கு உதாரணமாகிய தந்தை.!! இலங்கையில் இப்படியும் ஒரு மனிதரா..?

சின்னஞ்சிறுவர்கள் எமது குழந்தைகள் மட்டுமல்ல,தெய்வங்களும் கூட.இதனை எமது அன்றாட வாழ்க்கையில் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.என்னதான சிறுவர்கள் பல விடயங்களிலும் அடம்பிடித்தாலும், சின்னச் சின்ன குழப்படிகளை ரசிக்கவும் முடிகின்றது. ஆனால், எல்லா நேரங்களிலும் அல்ல. சில விடயங்களை பெற்றோருக்கு தெரியாமல் அவர்கள்செய்யும் தவறுகளை அவ்வப்போது கண்டித்து, திருத்த வேண்டிய இடங்களில் திருத்தினால், அவர்களின் வாழ்க்கை எப்போதும் சிறப்பாகவே இருக்கும்.ஆம்..இந்த வகையில் தந்தையொருவர் தமது செல்ல மகள் தனது புத்தம் புதிய காரில் கலர் பென்சில்களால் தனது சின்னக் கரங்களினால் கிறுக்கி விளையாடிய போதும், மிகவும் பொறுமையாக அதை ரசித்திருக்கிறார் என்பதற்கு இந்தப் பதிவு விளக்குகின்றது.இன்று வரும் வழியில் சிக்னலுக்காக காத்திருந்த போது இந்த காரை கண்டேன்.அதை செலுத்திய அந்த மனிதர் மீதினில் பெருமதிப்பு ஏற்பட்டது.ஆம், அவரது வண்டியின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்து விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு 3/4 வயதிருக்கும்.நான் கையசைத்த போது பதிலுக்கு மிகவும் குதூகலத்துடன் கையசைத்தாள். பெற்றோல் நிரப்ப அந்த கார் நிறுத்தப்படும் வரை, அந்தக் காரை ஏனோ பின் தொடர்ந்தேன்.” என் மகள் தான் காரில் கீறியது,அதை பெயின்ட் மூலம் திருத்திக் கொள்ளலாம்.பிள்ளைக்கு ஏசி என்னவாகப் போகிறது?” என்றார் தந்தை.எத்தனை கருணையுள்ள மனிதரிவர் ?என்று எண்ணியவாறு பிள்ளையை பார்த்தேன். புதிய சித்திரக் கொப்பியில் புதிதாக வாங்கிய colour chalk கொண்டு எதையோ வரைந்து கொண்டிருந்தாள்.இந்த அருமையான தந்தையின் பொறுமையைக் கண்டு பெரும் வியப்பில் ஆழ்ந்து போன நான், அந்தச் சின்னஞ் சிறுமியின் கைவண்ணத்தையும் புன்னகையையும்,ரசித்தவாறு மெதுவாக அவ்விடத்திலிருந்து நகர்ந்தேன்.. ஆம்..எமது நாட்டில் இப்படியும் அருமையான மனிதர்கள்!

நன்றி: -Fauzuna binth Izzadeen