தற்போது கிடைத்த செய்தி..யாழ்.கொக்குவிலில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

யாழ்ப்பாணம், கொக்குவிலை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட 60 வயதான நபரொருவர் கடந்த ஒரு வருடமாக தனது சொந்த இடமான கொக்குவிலில் தங்கியிருந்துள்ளார். அவர் மீளவும் பிரான்ஸ் செல்வதற்காக கடந்த 20ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்த தனியார் வாகனம் ஒன்றில், மேலும் சிலருடன் கொழும்பு சென்றுள்ளார்.விமானத்தில் பயணிப்பதற்கு பிசிஆர் அறிக்கை தேவைப்பட்டதால், 21ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டார்.அதன் முடிவு நேற்று வெளியானது. அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அவர் யாழ் நகரம், திருநெல்வேலி பகுதிகளில் பல இடங்களிற்கும் சென்று வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் சென்று வந்த இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன